100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!
ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியினை விளையாடி வருகிறார்.
உலக அளவில் 11-ஆவது வேகப் பந்துவீச்சாளராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஜிம்மி ஆண்டர்சன் அதிகபட்சமாக 188 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2011-இல் டெஸ்ட்டில் அறிமுகமான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 396 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி காலை 7.30 மணி வரைக்கும் சென்றது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. 225க்கு ஆல் அவுட்டாக முதல்நாள் முடிவில் மே.இ.தீ. அணி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. அந்த விக்கெட்டையும் ஸ்டார்க் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
100 டெஸ்ட் போடிகளை விளையாடிய வேகப் பந்துவீச்சாளர்கள்
1. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 188
2. ஸ்டூவர்ட் பிராட் - 167
3. கோர்ட்னி வால்ஷ் - 132
4. க்ளென் மெக்ரத் - 124
5. சமிந்தா வாஸ் - 111
6. ஷான் பொல்லாக் - 108
7. டிம் சௌதி - 107
8. இஷாந்த் சர்மா - 105
9. வாசிம் அக்ரம் - 104
10. மகாயா நிதினி - 101
11. மிட்செல் ஸ்டார்க் - 100*