செய்திகள் :

ஷுப்மன் கில் - ஜாக் கிராவ்லி மோதல்..! ஐபிஎல் தொடர் காரணமென முன்னாள் வீரர் கருத்து!

post image

இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லின் அநாகரிகமான செயல் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இஙந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியும் அதே 367க்கு ஆட்டமிழந்தது.

மூன்றாவது நாள் முடிவில் இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை இங்கிலாந்து தொடங்கியது. அதன் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை செலவிட்டார்.

இதனால் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்தார்.

எதனால் சண்டை?

பும்ரா வீசிய 5-ஆவது பந்தில் ஜாக் கிராவ்லிக்கு கையுறையின்மீது பந்துபட்டது. இதனால், அணியின் மருத்துவரை அழைத்தார் ஜாக் கிராவ்லி.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஷுப்மன் கில் ஆவேசம் அடைந்தார். கிண்டலாக கையைத் தட்டிகொண்டே ஜாக் கிராவ்லியை நோக்கி நடந்து எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

இருவரும் ஆவேசமாகப் பேசிக்கொண்டனர். பின்னர், பென் டக்கெட் உடனும் கில் ஆவேசமாகப் பேசினார்.

இந்த நிகழ்வு இந்திய ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றாலும் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

ஐபிஎல் விளையாடாததால் மோதல் அதிகரிப்பு

இங்கிலாந்து அந்த ஓவரை கடைசி ஓவராக்க நினைத்தது. அதை தந்திரன் என இந்தியர்கள் நினைத்தார்கள். அப்படியாகத்தான் அது இருந்திருக்கும்.

ஷுப்மன் கில் அப்படி நடக்கக் காரணம் இருக்கிறது. பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில்லை. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில்லை.

மற்ற அணிகளில் பெரும்பாலும் ஐபிஎல் விளையாடுகிறார்கள். அவர்கள் இந்திய வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களுடன் பயணிக்கவும் பழகவும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக சில வீரர்களிடம் காழ்ப்புணர்ச்சி அதிகமாக இருந்தது. ஆர்ச்சர் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீசும்போது அதன் தீவிரம் சற்று இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் விளையாடாததால் இந்திய வீரர்களுடன் மோதல் ஏற்படுகிறது என்றார்.

Former player Sunil Gavaskar has criticized Indian captain Shubman Gill for his indecent behavior.

விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இங்கிலாந்து வீரரை மோதிய சிராஜ்..! அபராதம் விதிக்கப்படுமா?

இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட்டில் இந்திய வீரர் முகமது சிராஜ் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்... மேலும் பார்க்க

கடைசி 7 இன்னிங்ஸில் 6-இல் டக் அவுட்டான பும்ரா..!

இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 2018 முதல் ஜஸ்பிரீத் பும்ரா (வயது 31) விளையாடி வருகிறார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இதுவரை ... மேலும் பார்க்க

100-ஆவது டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்..! இந்த மைல்கல்லை எட்டியவர்கள் பட்டியல்!

ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியினை விளையாடி வருகிறார். உலக அளவில் 11-ஆவது வேகப் பந்துவீச்சாளராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஜிம்மி ஆண்டர்சன் அதிகபட்சமாக 188 ... மேலும் பார்க்க

ராதா யாதவ் மிரட்டல் ஃபீல்டிங்: தொடரை வென்ற இந்திய மகளிரணி!

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.முதலிரண்டு போட்டிகளை இந்தியா வெல்ல, 3ஆவது போட்டியை இங்கிலாந்து வென்றது. 4-ஆவது போட்டியில் மீண்டெழுந்த இந்திய மகளிரணி 6 விக்கெட்டு... மேலும் பார்க்க

பகலிரவு டெஸ்ட்: 209 ரன்கள் பின்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறி... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: முதல்முறையாகத் தேர்வாகி வரலாறு படைத்த இத்தாலி!

கடைசி போட்டியில் தோற்றும் டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகி இத்தாலி அணி வரலாறு படைத்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது. இருப்பினும் கிரிக்கெட... மேலும் பார்க்க