செய்திகள் :

திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

post image

திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்துகளையும், 4 வழித்தடங்களில் புதிய குளிர்சாதன புறநகர் பேருந்துகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை தென்மாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மகளிர்

மற்றும் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தென்மாத்தூரிலிருந்து அருணை கல்லூரி, சரோன் புறவழிச்சாலை, திருவள்ளுவர் சிலை, காந்தி நகர், பெரியார் சிலை. மத்திய பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலகம், வேங்கிகால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவ கல்லூரி வழியாக தீபம் நகர் வரை தினசரி 28 நடைகள் இயக்கப்படும் வகையில் 2 மகளிர் விடியல் பயண புதிய நகரப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்பட்டு வரும் 122 ACA. 122 ACD, 122 KH ஆகிய வழித்தடங்கள், திருவண்ணாமலை - கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்டு வரும் 434 B ஆகிய வழித்தடங்களில் 4 புதிய குளிர்சாதன புறநகரப் பேருந்துகளை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் சிறப்புத் திட்டமான மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 128 நகர பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு, நாள் ஒன்றிற்கு சராசரியாக 77 ஆயிரம் மகளிர் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுநாள் வரை விடியல் பயணத்திட்டத்தின் மூலம் 11 கோடியே 29 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

மகளிர் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 61 சதவிகிதமாக இருந்தது, தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மேலாண் இயக்குநர் கே.குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2040-ல் நிலவில் இந்தியர்! இஸ்ரோ தலைவர் உறுதி!

Deputy Chief Minister Udhayanidhi Stalin flagged off the new city buses of the Women's Dawn Travel Scheme on 2 new routes and new air-conditioned suburban buses on 4 routes in Tiruvannamalai on behalf of the Tamil Nadu State Transport Corporation.

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார். வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில... மேலும் பார்க்க