லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து!
தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்
தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில், குடியாத்தத்தில் காங்கிரஸ் தொண்டா்களுக்கு நல உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழாவில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார்.
அப்போது, தமிழகத்தில் பாஜக காலடி எடுத்து வைக்க சூழ்ச்சி செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம். அதிமுக, பாஜகவோடு கைகோா்த்து அடுத்த தோ்தலை சந்திக்க உள்ளது.
பாஜக என்றால் வட நாட்டுக் கட்சி, இந்தியை திணிக்கிற கட்சி, இந்து மத வெறியை திணிக்கிற கட்சி, குறிப்பாக தென்னக மக்களை, தமிழ்நாட்டு மக்களை வெறுக்கிற கட்சி என எல்லாருடைய மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் இடம் பெறுவோம் என அமித்ஷா கூறுகிறாா். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்கிறாா். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறாா், எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சி ஆட்சி என்கிறாா். இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.அதிமுக கூட்டணியை தோற்கடித்து விட்டால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து விடும் என்றாா் சிதம்பரம்.