செய்திகள் :

Ajinkya Rahane: "டெஸ்ட் விளையாட விரும்பி செலக்டர்களை தொடர்புகொண்டேன்... ஆனால்" - ரஹானே

post image

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் களமிறங்காத ரஹானே (37) தனக்கு தொடர்ந்து டெஸ்டில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்வர்களை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார்.

லண்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஹானே, "நான் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதில் எனக்கு அதிக உத்வேகம் உள்ளது, டெஸ்ட் விளையாடும் தருணங்களை நான் அதிகம் என்ஜாய் செய்வேன்" எனக் கூறியுள்ளார்.

Rahane Captained Ranji Trophy
Rahane Captained Ranji Trophy

தான் தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகப் பேசிய ரஹானே, "நான் சில நாட்கள்தான் இங்கே இருக்கிறேன். ஆனாலும் என் பயிற்சி உபகரணங்களையும், ஆடையையும் எடுத்து வந்திருக்கிறேன். எங்களது உள்ளூர் சீசன் தொடங்குவதனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன" என்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கே.எல்.ராகுல் மட்டுமே பழைய வீரர்களில் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான போட்டி நிலவினாலும் ரஹானே தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகப் பேசியுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கம்பேக் கொடுக்க முயற்சிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

செலக்டர்களை தொடர்புகொண்ட Ajinkya Rahane!

ரஹானே
ரஹானே

"வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் தேர்வர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். சில விஷயங்கள் வீரர்கள் கையில் இருப்பதில்லை. எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஒரு வீரராக நான் செய்ய முடிவதெல்லாம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது், விளையாட்டை ரசிப்பது, ஒவ்வொரு முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வழங்குவது மட்டுமே." எனக் கூறியுள்ளார் ரஹானே.

இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் ரஹானே, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மும்பை அணியை ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

2023-24 சீசனில் மும்பை அணி கோப்பையை வென்றது, 2024-25 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தனர். கடைசி ரஞ்சி டிராபியில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் 14 இன்னிங்ஸ்களில் 467 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன் குவித்த வீரராக 14 இன்னிங்ஸில் 390 ரன்கள் அடித்தார்.

ENG vs IND: “ரிஷப் பண்ட் அவுட் ஆனதற்கு நான்தான் காரணம்” - வெளிப்படையாகப் பேசிய கே.எல் ராகுல்

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இங்கில... மேலும் பார்க்க

ENG vs IND: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் ஆர்ச்சர்... எதிரில் பும்ரா! லார்ட்ஸில் யாருக்கு மகுடம்?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிக... மேலும் பார்க்க

ENG vs IND: "அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்" - சுப்மன் கில் குறித்து கங்குலி

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியா... மேலும் பார்க்க

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் ... மேலும் பார்க்க

"பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பித் தரவேயில்லை" - தன்மீது புகாரளித்த பெண்மீது யஷ் தயாள் புகார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாக... மேலும் பார்க்க

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையி... மேலும் பார்க்க