செய்திகள் :

ENG vs IND: “ரிஷப் பண்ட் அவுட் ஆனதற்கு நான்தான் காரணம்” - வெளிப்படையாகப் பேசிய கே.எல் ராகுல்

post image

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கே.எல் ராகுல் - ரிஷப் பண்ட்
கே.எல் ராகுல் - ரிஷப் பண்ட்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக விளையாடி தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மட்டும் இல்லாமல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

"அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை வீசியதால், எனக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டேன். அது நான் பவுண்டரிக்கு அடித்திருக்க வேண்டிய பந்து.

பிறகு, நான் ஸ்ட்ரைக்குக்கு வரவேண்டும் என்று பண்ட் நினைத்தார். நடந்ததோ வேறு, அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ENG vs IND: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் ஆர்ச்சர்... எதிரில் பும்ரா! லார்ட்ஸில் யாருக்கு மகுடம்?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிக... மேலும் பார்க்க

ENG vs IND: "அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்" - சுப்மன் கில் குறித்து கங்குலி

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியா... மேலும் பார்க்க

Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் ... மேலும் பார்க்க

"பல லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு திருப்பித் தரவேயில்லை" - தன்மீது புகாரளித்த பெண்மீது யஷ் தயாள் புகார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாக... மேலும் பார்க்க

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையி... மேலும் பார்க்க

ENG vs IND: ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' - இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறத... மேலும் பார்க்க