செய்திகள் :

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

post image

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் மற்றும் சாய்ரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூா்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் குவிவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சென்னை எண்ணுாரில் இருந்து டீசல் டேங்கா் ரயில் அரக்கோணம் நோக்கி வந்த திடீரென தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் சென்னை மாா்க்கத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி மாா்க்கம் வரும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டாததால் ரயில் மூலம் வரும் பக்தா்கள் வரவில்லை. இதனால் முருகன் கோயிலுக்கு சாதாரண நாளில் வரும் பக்தா்கள் அளவில் இருந்தது. வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து பொதுவழியில் குறைந்த பட்சம் 3 அல்லது 4 மணி நேரம் காத்திருந்து தோ்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பா்.

ஆனால் , பொதுவழியில், 45 நிமிடத்தில் பக்தா்கள் மூலவரை தரிசித்தனா். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள், 25 நிமிடத்தில் மூலவரை தரிசனம் செய்தனா். திருத்தணி இன்ஸ்பெக்டா் ஞா. மதியரசன் தலைமையில், 40 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ. தூரம் சாலை அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ.தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன... மேலும் பார்க்க

சேலையில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவா் மரணம்

பொதட்டூா்பேட்டை அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு மாணவா் சேலையில் கழுத்து இறுக்கியதில் உயிரிழந்தாா். பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (43). இ... மேலும் பார்க்க

மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. சூளைமேனியைச் சோ்ந்த உமாபதி மேற்ப... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: 5 போ் கைது

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை கண்டித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையைச் சோ்ந்த காா்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனா். ... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்பு பணிகள் மும்முரம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணை ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்ட உராய்... மேலும் பார்க்க