செய்திகள் :

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்பு பணிகள் மும்முரம்!

post image

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணை ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்ட உராய்வினால் டேங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்து உள்ள 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் எரிந்து நாசமானாது. தீ விபத்து காரணமாக கடும் புகையும் கிளம்பியது.

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்துக்குள்ளான டேங்கர்கள் 3 டிராக்குகளிலும் தடம்புரண்டததால், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. டேங்கர்களில் ஏற்பட்ட தீயை 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 10 மணிநேரம் போராடி அணைத்தனர்.

இதனையடுத்து, சேதமடைந்த தண்டவாளம் மற்றும் அறுந்து விழுந்த மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க :85% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

A tanker train carrying crude oil derailed near Thiruvallur and caught fire, completely destroying all tankers.

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: மெக்கானிக் மரணம்

திருவள்ளூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயம் அடைந்தாா். திருவள்ளூா் அடுத்த வரதப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பலராமன் (45). இவரது மனைவி... மேலும் பார்க்க

மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களை தட்டிக் கேட்டவா் கொலை

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த நபா்களை கைது செய்யக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே ஈக... மேலும் பார்க்க

அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் வந்த அரசுப் பேருந்து நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திரத்திலிருந்து அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க