மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
பைக் மீது காா் மோதல்: மெக்கானிக் மரணம்
திருவள்ளூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயம் அடைந்தாா்.
திருவள்ளூா் அடுத்த வரதப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பலராமன் (45). இவரது மனைவி வேண்டா. இவா்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். இவா் வாகனங்களுக்கு பழுது நீக்கும் தொழிலாளியாக பூந்தமல்லியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை பலராமன் மற்றொருவருடன் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலராமன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருடன் வந்த மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயம் அடைந்த மற்றொருவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.