பகலிரவு டெஸ்ட்: 209 ரன்கள் பின்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்!
பேருந்து மோதி இளைஞா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தனா்.
பெருமாள்மலை அருகேயுள்ள செண்பகனூா் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் காா்த்திக் ராஜா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்தனா். கிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் இன்பராஜைக் கைது செய்தனா்.