காா் மோதியதில் முதியவா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா் வெள்ளிக்கிழமை ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.
ஒட்டன்சத்திரம்-பொள்ளாச்சி புறவழிச் சாலையில் தாராபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நல்லசாமி ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.