பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
சட்டமும் நீதியும் இணையத் தொடர் வெளியீட்டுத் தேதி!
நடிகர் சரவணன் நடிப்பில் உருவான சட்டமும் நீதியும் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாக வெற்றிப் பெற்ற நடிகர்களில் கவனிக்கப்பட்ட சரவணன், பருத்தி வீரன் படம் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டார். அதன்பின், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போது, சசிகலா பிரபாகரன் தயாரிப்பில் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, "சட்டமும் நீதியும்" என்கிற இணையத் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார்.
குற்ற வழக்கு, சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இத்தொடரின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், சட்டமும் நீதியும் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவதுதான் என் கனவு: ஷங்கர்