மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு கடிதம்!
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!
போலந்து கால்பந்து மகளிரணி முதல்முறையாக ஐரோப்பிய சாம்பியனில் வென்று வரலாறு படைத்துள்ளது.
போலந்து மகளிரணி ஐரோப்பிய சாம்பியன் குரூப் ஸ்டேஜ் போட்டியில் டென்மார் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் 3-2 என போலந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக ஒரு பெரிய தொடரில் போலந்து மகளிரணி வென்றுள்ளது.
நேற்று போலந்து டென்னிஸ் வீராங்கனை முதல்முறையாக விம்பிள்டன் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சாம்பியனுக்கு முதல்முறையாக தகுதிபெற்ற போலந்து அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்றது.
குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் டென்மார்க் உடன் மோதியது. இதில் 13, 20-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-0 என முன்னிலை வகித்தது.
மீண்டெழுந்த டென்மார்க் 59, 83ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் போலந்து 76-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-2 என வென்றது.
இது குறித்து போலந்து பயிற்சியாளர் நினா படோலன், “நாங்கள் ஒரு கோல் அடிக்க இருந்தோம், கடைசியில் 3 அடித்தோம். எங்கள் மகளிர் அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்” என்றார்.
நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறாவிட்டாலும் இந்த வெற்றி போலந்து அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.