மாநிலங்களுக்கிடையே காா் திருடும் கும்பல் கைது: கார் உள்பட 4 வாகனங்கள் மீட்பு
வெற்றி மாறன் படத்திற்காக உடல் எடையைக் குறைத்த சிம்பு!
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறனின் படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோ இம்மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மாரீசன் டிரைலர் அப்டேட்!