பகலிரவு டெஸ்ட்: 209 ரன்கள் பின்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்!
எலக்ட்ரீசியன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவுக்கு பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்ததால் மன வேதனையில் இருந்து வந்த சங்கா், சனிக்கிழமை வடகாடு மலைப்பகுதிக்குச் சென்று மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.