செய்திகள் :

Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண்டல்பேட்!

post image

பூக்களின் நகரம் என்றும் இந்தியாவின் பூந்தொட்டி என்றும் வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இங்கு நிலவும் காலநிலையின் காரணமாக குண்டல்பேட் பகுதியில் வருடம் முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுவது தனிச்சிறப்பு.

சூரியகாந்தி

இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மலர் சாகுபடியே முக்கிய பங்காற்றி வருகிறது.

தனித்துவமான சாமந்தி, மல்லி, செண்டுமல்லி போன்ற மலர்கள் மட்டுமின்றி எண்ணெய் வித்தான சூரியகாந்தியும் ஆயிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

முதலீடு குறைந்த மூன்று மாத மானாவாரிப் பயிரான சூரியகாந்தி, விவசாயிகளுக்கு நல்ல பலன் தரும் பயிராக விளங்குகிறது. குண்டல்பேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மே மாதம் பயிரிடப்பட்ட சூரியகாந்தி செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கியிருக்கிறது.

சூரியகாந்தி

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஒரே சமயத்தில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் காண்போரைக் கவர்ந்து வருகின்றன.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் காடாகக் காட்சியளிக்கும் சூரியகாந்தி மலர்களைக் காண மக்களும் படையெடுத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக மூன்று மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கும் பந்திப்பூர் - குண்டல்பேட் சாலையோர தோட்டங்களில் அடர் மஞ்சள் நிறத்தில் அலை அலையாக அசைந்தாடும் சூரியகாந்தி தோட்டங்கள் செஃல்பி ஸ்பாட்டாக மாறியுள்ளன.

சூரியகாந்தி

புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ரூ. 20, ரூ. 30, ரூ.50 என ஒருசில தோட்டங்களில் கட்டணமும் வசூலிக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் பூக்களை அறுவடை செய்து விதைகளை ஆலைகளுக்கு அனுப்பும் பயணிகளைத் தொடங்க உள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மதுரை: நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு மாடுகளின் மாநாடு | Photo Album

நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளின் மாநாடுநாம் தமிழ... மேலும் பார்க்க

Coimbatore Agri Intex 2025 Expo: 'வேளாண் கருவிகள், ஆயிரக்கணக்கான விதைகள்...' | Photo Album

அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025அக்ரி இன்டெக்ஸ் 2025... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசே உத்தரவு போடலாம்..!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!சிபில் ஸ்கோர்... இது உரிய அளவில் இல்லாவிட்டால், இன்றைக்கு வங்கிகளில் நம்மால் கடன்கள் வாங்கவே முடியாது. கிரெடிட் கார்டு கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள் என வங்கிக... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.ஜெயமணி,செங்கமடை,ராமநாதபுரம்.97910 36746சுத்தமான கறுப்பு அரிசி, வியட்நாம் கறுப்புக் கவுனி விதைநெல், தங்கச் சம்பா விதைநெல் மற்றும் செம்மரம், நாவல் மரம்.ஆர்.சம்பந்தமூர்த்திசோழமூர்,... மேலும் பார்க்க

100 சதுர அடியிலேயே கூட தொடங்கலாம்... லாபம் தரும் காளான் வளர்ப்பு பயிற்சி!

பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து 2025, ஜூலை 11-ம் தேதி 'லாபம் கொடுக்கும் காளான் வள... மேலும் பார்க்க