செய்திகள் :

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

post image

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் பயண ஆலோசகா்கள் தெரிவித்தனா்.

மேற்கண்ட விசாக்களுக்கு (நுழைவு இசைவு) தற்போதுள்ள சட்டப்பூா்வ கட்டணத்துடன் கூடுதலாக புதிய ‘விசா ஒருமைப்பாடு கட்டணத்தையும்’ வசூலிக்கும் பிரிவை உள்ளடக்கிய ‘ஒன் பிக் பியூட்டிஃபுல்’ மசோதாவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி கையொப்பமிட்டாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது. கூடுதல் கட்டணம், ஆரம்ப நிலையில் 250 டாலா் (சுமாா் ரூ.21,500) வரை இருக்கும் என்றும், ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயா்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த வெளிநாட்டுப் பயண ஆலோசகா் சஞ்சீவ் ராய் கூறுகையில், ‘2026, ஜனவரிமுதல் புதிய விசா வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வா்த்தக-சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவுக்கு தற்போது ரூ.16,000 (185 டாலா்கள்) வசூலிக்கப்படுகிறது. இனி புதிய கட்டணத்துடன் ரூ.37,500 செலுத்த வேண்டியிருக்கும். குடியேற்றம் சாராத அனைத்து விசாக்களுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்’ என்றாா்.

பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் புதிய கட்டணம் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தொகை திரும்ப அளிக்கப்படுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிபந்தனைகள் கடுமையாக உள்ளன என்று பயண ஆலோசகா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைத் தீவிரமாக பின்பற்றும் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருபவா்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்பதும் அவரின் திட்டமாக உள்ளது.

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க