தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி
தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர்.
கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியது.
இந்த சம்பவத்தில் இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி உள்பட5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும் இதில், லதி (40), அவரது எட்டு வயது மகள் பிம்லா, கணவர் சபாமி என்ற சிர்மா (45), ராம் சந்தர் (45) மற்றும் அவரது மனைவி நாராயணி (35) ஆகியோர் பாலினர்.
அனைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். முதற்கட்ட விசாரணை மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், ஷிவா கேம்ப் முன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளை நிற ஆடி கார் பாதிக்கப்பட்டவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது.
துவாரஹாவைச் சேர்ந்த சேகர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
டேங்கர் ரயில் தீவிபத்து! பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் வரலாம்!
A drunk driver of an Audi car allegedly ran over five people, including two couples and an eight-year-old girl, injuring them while they were sleeping on a footpath near Shiva Camp in southwest Delhi's Vasant Vihar area, an official said on Saturday.