சாதனையை நீட்டித்த மெஸ்ஸி..! ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்!
இன்டர் மியாமி கால்பந்து வீரர் மெஸ்ஸி மீண்டும் எம்எல்எஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
எம்எல்எஸ் தொடரில் நாஷ்வில்லி அணியுடன் இன்டர் மியாமி அணி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மோதியது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 2-1 என வென்றது. இதில் மெஸ்ஸி 17, 62-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
மேலும், மெஸ்ஸி இந்த முறையும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
கடந்த வாரத்தில் எம்எல்எஸ் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 2 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.
தற்போது, மீண்டும் அந்த சாதனையை 5 போட்டிகளிலும் 2 கோல்கள் அடித்த முதல் வீரர் எனக் கூடுதலாக்கியுள்ளார்.
இதுவரை எம்எல்எஸ் தொடரில் யாரும் இப்படி விளையாடியதில்லை. இதற்கு முன்பாக மெஸ்ஸி 2012-இல் பார்சிலோனாவில் 6 முறை தொடர்ச்சியாக 2 கோல்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் 16 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் (16 கோல்கள்) அடித்த சாமுவேல் வில்லியம் சுரிட்ஜுடன் சமன்செய்துள்ளார்.