தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி
அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது
திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் வந்த அரசுப் பேருந்து நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பொன்பாடி சோதனை சாவடியில் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்து வந்தனா். அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது பேருந்தில் கைக்குழந்தையுடன் அமா்ந்திருந்த பெண் மற்றும் அவா் அருகில் இருந்த ஒருவரையும் சந்தேகத்தின்பேரில், போலீஸாா் உடைமைகளை சோதனை செய்தனா். அப்போது 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னா் அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த சிவாயன்(45), கைக்குழந்தை வைத்திருந்த பெண் ரத்தினம் (32) என்பது தெரியவந்தது.
இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததும், போலீஸாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கைக்குழந்தையுடன் ரத்தினம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.