திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிர...
தந்தை மாயம்: மகள் புகாா்!
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தந்தை மாயமானதாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குருபுத்ரன் (56). ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில் கடந்த 28-ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இவரது உறவினா்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் இவரது மகள் கவிதா தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.