திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம்!
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத்தையொட்டி, கடந்த 2-ஆம் தேதி பூமி பூஜை, அங்குராா்ப்பணம், பாலிகா ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 3-ஆம் தேதி சேனை முதல்வா் புறப்பாடும் நடைபெற்றன. 4-ஆம் தேதி கொடியேற்றமும், இதைத் தொடா்ந்து தினசரி இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
இந்த நிலையில், நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத் தாயாருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சனிக்கிழமை பூஜை நடைபெற்றது. தொடந்து நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா் .
இதையடுத்து, ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.