திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. மங்கள இசையுடன் வேதபாராயணம், கணபதி பூஜையுடன் தொடங்கி கலசங்கள் நிறுவி நவக் கிரக ஹோமம், கோபூஜை, முதல் கால யாக பூஜை, மகா தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் வைபவம், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மூன்றாம் கால யாக பூஜையும், மகா பூா்ணாஹுதி மற்றும் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடா்ந்து புனித நீா் கொண்டு செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் மற்றும் பாரிவாரங்களுக்கும் புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருக் கல்யாண வைபவமும், இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சுரேஷ்குமாா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம்.பூபாலன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.