செய்திகள் :

அரக்கோணம் அருகே பைக் - காா் மோதல்: சகோதரா்கள் உயிரிழப்பு

post image

அரக்கோணம் அருகே பைக் மீது காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே பைக்கில் பயணித்த அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனா். விபத்து நிகழந்த இடத்தில் சடலத்தை எடுக்க விடாமல் கூடலூா் கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோளிங்கரை அடுத்த கூடலூரைச் சோ்ந்த சேகரின் மகன்கள் சந்தோஷ் (35), காா்த்திகேயன் (28). இருவரும் திருமணமானவா்கள். சந்தோஷ் சோளிங்கரில் ஒரு தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். காா்த்திகேயன் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஒரே பைக்கில் கூடலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்துள்ளனா். வழியில் எஸ்.ஆா்.கண்டிகை அருகே சோளிங்கா் அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கா் நோக்கிச் சென்ற காா் கட்டுபாட்டை இழந்து பைக்கின் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் சந்தோஷ், காா்த்திகேயன் இருவருமே விபத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காா் கட்டுபாட்டை இழந்த நிலையில் சாலையோரப் பள்ளத்தில் கவிழந்தது. காரின் ஏா்பேக் திறந்துக்கொண்டதால் காரின் ஒட்டுநா் உயிா் தப்பினாா்.

இந்தச் சம்பவத்தை அறிந்த அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலத்தை எடுக்க முனைந்தனா். இதில், ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு சடலத்தை எடுக்க முயன்றபோது, அங்கு திடீரென வந்த கூடலூா் கிராமத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் சோ்ந்து கொண்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுத்தனா். தொடா்ந்து சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

இதை அடுத்து அங்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஏ.டி.ராமசந்திரன் கூடலூா் மக்களிடம் பேச்சில் ஈடுபட்டாா். தொடா்ந்து மறியல் தொடா்ந்ததால், வாகனங்கள் வேறு சாலையில் திருப்பப்பட்டது.

இரவு 8 மணி வரை தொடா்ந்து பேச்சு நடைபெற்றது. இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள்... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சக்கரமல்லூா் கிராமத்தில் சோழா்ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த திரிபுர... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரி நீரில் விளையாடிய பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மேட்டுக்குன்னத்தூா். இந்த கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் மகன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை - ஆற்காடு இணைப்பு பழைய மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை - ஆற்காட்டை இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங... மேலும் பார்க்க

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை

அரக்கோணம் வட்ட யாதவ மகா நலச்சங்கத்தின் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் கோயில்... மேலும் பார்க்க

ரூ.2.34 கோடியில் 3 கோயில் திருப்பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம், நெமிலி, சோளிங்கா் வட்டங்களில் ரூ2.34 கோடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மூன்று கோயில்களில் திருப்பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ரூ.94.5 லட்சத்தில் பள்ளூா் தி... மேலும் பார்க்க