செய்திகள் :

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறாரா வெங்கட் பிரபு? - என்ன சொல்கிறார் இயக்குநர்?

post image

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

முருகதாஸ் இயக்கத்தில் அப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்...
பராசக்தி படப்பிடிப்பு தளத்தில்...

இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அவர் வேறு எந்த இயக்குநருடன் இணையவிருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி, அவரை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பல பெயர்கள் பேசப்பட்டன.

அவற்றில், விஜய்யின் 'தி கோட்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்.கே. நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டது. அந்தத் தகவலை தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவே பகிர்ந்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை, விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

வெங்கட் பிரபு

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வெங்கட் பிரபு, இந்த இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனை வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.

அப்படத்தையும் 'தலைவன் தலைவி' படத்தைத் தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்ற தகவலையும் இங்கு வெங்கட் பிரபு பகிர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவின் 'தி கோட்' திரைப்படத்திலும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! - சரோஜா தேவியின் ப்ளாஸ்பேக் பேட்டி

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி.கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன... மேலும் பார்க்க

Saroja Devi: ``ஐகானிக் சரோஜா தேவி அம்மா இனி இல்லை, ஆனாலும்..'' - இரங்கல் தெரிவித்த சிம்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷ... மேலும் பார்க்க

Saroja Devi: 'வேதனை அடைந்தேன்; அவரின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாதது'- ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன... மேலும் பார்க்க

Saroja Devi: "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நம்முடன் இல்லை" - இரங்கல் தெரிவித்த ரஜினி

நடிகை சரோஜா தேவி இயற்கை எய்தியிருக்கிறார். 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தியிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

Saroja Devi: "எனக்கு மறுமணம் செஞ்சுக்க இஷ்டம் இல்ல; என் கணவர்..!" - சரோஜா தேவி ஃப்ளாஷ்பேக் பேட்டி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என த்ரீ ஸ்டார்களுக்கு நாயகியாக நடித்த 'டாப் ஸ்டார்' நடிகை சரோஜா தேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் படமான 'புதிய பறவை' வ... மேலும் பார்க்க

'வாழை' பட லாரி கவிழும் காட்சி - சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப... மேலும் பார்க்க