'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் ...
'வாழை' பட லாரி கவிழும் காட்சி - சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார்.

நெஞ்சு வலி ஏற்பட்ட அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக உறுதிபடுத்தியிருக்கின்றனர். இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ், "சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது.
சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும்… pic.twitter.com/zr9sInLrt6
— Mari Selvaraj (@mari_selvaraj) July 14, 2025
'வாழை' இறுதிக் காட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா' என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...