செய்திகள் :

ஐயம் ஃப்ரீ: விவாகரத்தைக் கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த இளைஞர்!

post image

வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை விருந்துவைத்துக் கொண்டாடுவது மட்டுமல்ல, பாலில் குளித்தும் கொண்டாடலாம் என்று அஸ்ஸாமில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.

அஸ்ஸாமின் நல்பாரியில் உள்ள பரலியாபர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரின் மனைவி திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணிக் அலியின் மனைவி இரண்டு முறை வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்பு மனைவியைச் சமாதானம் பேசி மனைவியை வீட்டுக்கு வரவழைத்து, பெண் குழந்தைக்காக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும், அவரது மனைவி நடத்தையில் மாற்றம் ஏற்படாமல் இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன மாணிக் அலி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். விவாகரத்துக்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்ததால், கடைசியாக இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தனது மனைவியின் விவாகரத்தை மாணிக் அலி வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். அதாவது சுமார் 40 லிட்டர் பாலை அவர் மேல் ஊற்றிக் குளித்துள்ளார்.

இத்தனை நாள்களாக தனக்கு மன உளைச்சலாக இருந்த மனைவி இன்றுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால் தாம் இவ்வாறு கொண்டாடுவதாக மாணிக் அலி விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த விடியோவில், எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து ஆனது மகிழ்ச்சி, ஆனால் என் மகளை மனைவி அழைத்துச் சென்றுவிட்டார். அது எனக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் கேமராவை ஆன்செய்து பாலில் குளித்ததாகவும், மறுபிறவி எடுத்ததுபோல் உணர்வதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர்

கடந்தாண்டு ஆடம்பரமான விவாகரத்து விருந்தை நடத்தினார். ஹரியாணாவைச் சேர்ந்த மஞ்ஜித் 2020இல் கோமலை மணந்தார். அவர்களின் திருமணம் 2024 இல் விவாகரத்தில் முடிந்தது, இந்த நிகழ்வை மஞ்ஜித் பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்.

விருந்தில் மஞ்சீத் கோமலின் திருமண புகைப்படத்தில் திருமணம் மற்றும் விவாகரத்தின் தேதிகளுடன் ஒட்டப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

A man from Assam's Nalbari district drew widespread attention after sharing a video of himself bathing with four buckets of milk to celebrate his divorce.

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விப... மேலும் பார்க்க

யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர... மேலும் பார்க்க

உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்: சுவர் ஏறிக் குதித்துச் சென்றார்!

காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க

தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

தலைநகர் தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகா செக்டார் 16 இல் உள்ள பள்ளிகளிலிருந்தும், சாணக்யபுரியில் உள்ள மற... மேலும் பார்க்க

அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: புதிய குழு இன்று புறப்பட்டது!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 6,100 பேர் கொண்ட புதிய குழு திங்கள்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவி மரணம்: 60 சிசிடிவி கேமராக்களில் ஒன்றுகூட...

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஜூலை 7ஆம் தேதி காலை, நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர், ஆற்றில் குதித்... மேலும் பார்க்க