செய்திகள் :

தில்லி பல்கலை. மாணவி மரணம்: 60 சிசிடிவி கேமராக்களில் ஒன்றுகூட...

post image

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஜூலை 7ஆம் தேதி காலை, நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் வடக்கு தில்லியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் மட்டும் சுமார் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும்கூட, சம்பவத்தன்று ஒன்று கேமராவும் வேலை செய்யவில்லை என்பதால், மாணவியின் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

சிநேஹா தேவ்நாத் தந்தை, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக இருக்கும் நிலையில், தனது மகளின் மரணத்தில் இருக்கும் உண்மையைக் கண்டறிய உதவுமாறு சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். சம்பவம் நடந்தது ஒரு மாநிலம், இவர்கள் வாழ்வது ஒரு மாநிலம் என்பதால், வழக்குப் பதிவு செய்வதில் அலைக்கழிக்கப்படுவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தில்லியில் உள்ள ஆத்ம ராம் சநாதன தர்மா கல்லூரியில் பயின்றுவந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேவ்நாத், தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இவர் ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போன நிலையில், ஜூலை 9ஆம் தேதி அவர் மாயமானது குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினேகா தேவ்நாத், யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவிருப்பதாக தனது நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பிவிட்டு, காணாமல் போயிருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆற்றில் அவரைத் தேடும் பணிகளும் நடைபெற்று வந்தன.

கடைசியாக சினேகாவைப் பார்த்தவர்கள், பாலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாகவும் சிலா் தெரிவித்தனா்.

ஆற்றில், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை சினேகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர... மேலும் பார்க்க

ஐயம் ஃப்ரீ: விவாகரத்தைக் கொண்டாட 40 லிட்டர் பாலில் குளித்த இளைஞர்!

வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை விருந்துவைத்துக் கொண்டாடுவது மட்டுமல்ல, பாலில் குளித்தும் கொண்டாடலாம் என்று அஸ்ஸாமில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர். அஸ்ஸாமின் நல்பாரியில் உள்ள பரலிய... மேலும் பார்க்க

உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தம்: சுவர் ஏறிக் குதித்துச் சென்றார்!

காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பார்க்க

தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

தலைநகர் தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகா செக்டார் 16 இல் உள்ள பள்ளிகளிலிருந்தும், சாணக்யபுரியில் உள்ள மற... மேலும் பார்க்க

அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: புதிய குழு இன்று புறப்பட்டது!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 6,100 பேர் கொண்ட புதிய குழு திங்கள்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் ... மேலும் பார்க்க

வதோதராவில் புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி !

வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் ... மேலும் பார்க்க