விறுவிறுப்பான கட்டத்தில் 3-ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 60 ரன்கள் தேவை!
இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார் வெல்லுவார்கள்?
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 367 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4-ஆம் நாள் முடிவில் 58 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.
இந்திய அணி வெற்றிபெற 135 ரன்களும் இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிபெற 135 ரன்களும் இங்கிலாந்து வெற்றிபெற 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரில் 2-1 என முன்னிலைப் பெறும். அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இரு அணி வீரர்களும் அடிக்கடி வாக்குவாதம், மோதலில் ஈடுப்பட்டு வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கிறது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.