வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து... 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!
கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி காலை 7.30 மணி வரை நடைபெறுகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2250க்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 143க்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 2ஆம் நாள் முடிவில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
களத்தில் பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் கேமரூன் க்ரீன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அல்ஜாரி ஜொசப் 3, ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
ஒரே நாளில் இரண்டு அணிகளும் சேர்த்து 15 விக்கெட்டுகளை (மே.இ.தீ. 9 + ஆஸி. 6) இழந்துள்ளன.
தற்போது, 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.