திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்;...
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''திரைத் துறை ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய சினிமா மற்றும் கலாசாரத்தின் முன்மாதிரியாக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அவரின் மாறுபட்ட நடிப்பு தலைமுறைகளைத் தாண்டி அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொழிகளில் பல்வேறு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரின் பணிகள் இருந்தது, இயல்பிலேயே அவரின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அவரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி'' எனப் பதிவிட்டுள்ளார்.
Saddened by the passing of the noted film personality, B. Saroja Devi Ji. She will be remembered as an exemplary icon of Indian cinema and culture. Her diverse performances left an indelible mark across generations. Her works, spanning different languages and covering diverse…
— Narendra Modi (@narendramodi) July 14, 2025
கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி (வயது 87), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 14) காலமானார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரருமான நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!
Prime Minister Narendra Modi has condoled the death of veteran actress Saroja Devi.