செய்திகள் :

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

post image

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், துணை முதலமைச்சரும், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சமீப காலமாக இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டில் பேசிவருகிறார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் பேசியிருக்கும் பவன் கல்யாண், "இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

ஆனால், அவர் இந்தியை விரும்பினார். மொழி என்பது இதயங்களை இணைக்கும் என்று அவர் கூறுவார்.

எனவே, இந்தி மொழியை அவரது பார்வையில் நாம் பார்ப்போம். யாரும் அதைத் திணிக்கமாட்டார்கள், யாரும் அதை வெறுக்கமாட்டார்கள். அதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்தி கட்டாயமான ஒன்றல்ல, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழி.

வேலைக்காக ஜெர்மனிக்கு செல்லும்போது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்கிறோம், ஜப்பானுக்குச் செல்லும்போது ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறிருக்கும்போது, நம் சொந்த இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள நாம் ஏன் பயப்படுகிறோம்?

Hindi - இந்தி
Hindi - இந்தி

எதற்காக இந்த தயக்கம். வெறுப்பையும், தயக்கத்தையும் நாம் விட்டுவிட வேண்டும்.

நம் மீது இந்தி திணிக்கப்படுவதாக சிலர் அரசியல் செய்கிறார்கள். ஆங்கிலத்தை நவீன மொழி என்று கூறி ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும்போது, இந்தியை ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது? அதிலென்ன தவறு இருக்கிறது?

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

உலகம் முழுவதும், மக்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தி ஒரு ஒன்றிணைக்கும் சக்தியாக நிற்கிறது.

மாநிலங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றைக் கடந்து நம்மை இணைக்கும் மொழி இது. நம் தேசிய மொழியாக இந்தியை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

நம்முடைய அடையாளத்துக்கு நம் தாய்மொழி தேவை. அதேசமயம், நாம் நம் வீடுகளைத் தாண்டி பரந்த சமூகத்தில் அடியெடுத்து வைக்கப் பொதுவான மொழி வேண்டும். அதுதான் நமது ராஷ்டிர மொழி இந்தி.

நம்முடைய தாய்மொழி நமக்கு தாய் போல என்றால், இந்தியாவின் அனைத்து மொழியியல் குடும்பங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் மூத்த தாய் இந்தி.

இந்தி மீதான வெறுப்பை விடுங்கள். அதை ஏற்றுக்கொள்வோம்." என்று கூறினார்.

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார். ப... மேலும் பார்க்க

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய க... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க

'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்க... மேலும் பார்க்க