செய்திகள் :

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் முதல் காலாண்டு இழப்பு ரூ.194 கோடி!

post image

புதுதில்லி: உள்நாட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியாளரான தேஜாஸ் நெட்வொர்க்ஸ், ஜூன் 2025ல் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.193.87 கோடி ஒருங்கிணைந்த நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விற்பனை சரிவு என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி கியர்களை வழங்கிய நிறுவனம், ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.77.48 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

தேஜாஸ் நெட்வொர்க்ஸின் ஒருங்கிணைந்த வருவாய், ஜூன் 2024 காலாண்டில் ரூ.1,563 கோடியாக இருந்ததாக அறிவிக்கப்பட்ட காலாண்டில் சுமார் 87 சதவிகிதம் சரிந்து ரூ.202 கோடியாக உள்ளது.

பாரத்நெட் - 3 மற்றும் ஆப்டிகல் உபகரணங்களுக்கான எங்கள் ரூட்டர்களுக்கான ஆர்டர்களை இந்தியாவில் உள்ள தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து பெற்றோம்.

பி.எஸ்.என்.எல். விரிவாக்க ஆர்டர் உள்ளிட்ட சில கொள்முதல் ஆர்டர்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாக தேஜாஸ் நெட்வொர்க்ஸ் தலைமை இயக்க அதிகாரியான அர்னோப் ராய் தெரிவித்தார்.

அதே வேளையில் வருவாய் குறைவு காரணமாக ரூ.194 கோடி நிகர இழப்பு ஏற்பட்டதாக தேஜாஸ் நெட்வொர்க்கின் தலைமை நிதி அதிகாரி சுமித் திங்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

Domestic telecom gear maker Tejas Networks posted a consolidated loss of Rs 193.87 crore in the first quarter ended June 2025.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 86.02 ஆக நிறைவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடையும் டாலருக்கு மத்தியில் இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவடைந்தது.அந்நிய... மேலும் பார்க்க

அதிக பிக்சல் திறனுடன் புதிய ஸ்மார்ட்போன்! விவோ எக்ஸ் 200 எஃப்இ அறிமுகம்!

விவோ நிறுவனம் எக்ஸ் சீரிஸ் வரிசையில் புதிதாக விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதிக பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. இதன் எடை 186 க... மேலும் பார்க்க

4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஐடி பங்குகளின் தொடர் விற்பனையும் அதனை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 4வது அமர்வாக சரிந்து நிறைவடைந்தன.30 பங்குகளை... மேலும் பார்க்க

விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா?

விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனக் கிளைகளிலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவைத் தலைமையிடமாகக் கொண... மேலும் பார்க்க

இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ், இந்திய பயனாளா்களுக்கான சந்தா கட்டணங்களை 48 சதவீதம் வரை குறைத்துள்ளது.இது குறித்து அந்த ஊடகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய பயனாளா்கள் மொபைல் செ... மேலும் பார்க்க

டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன. நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குக... மேலும் பார்க்க