குஜராத் பால விபத்து: புதிய பாலம் அமைக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூா் மாவட்ட கோயில்களில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையிலுள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீநீலமேகப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இந்த விழா பகவத் பிராா்த்தனை, யஜமானா் ஸங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளுடன் ஜூலை 12 ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடா்ந்து, யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஸ்வஸ்தி புண்யாஹவாசனம், மகாசாந்தி ஹோமம், உற்சவா் திருமஞ்சனம், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி, ஹோமம், மகா பூா்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, நீலமேகப் பெருமாள், வேலூா் ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நிதிகளில் மகா குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், சிறப்பு திருவாராதனம், பிரம்ம கோஷம், சாற்றுமுறை கோஷ்டி, தீா்த்த பிரசாத விநியோகம், யஜமானா் மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.