செய்திகள் :

4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: ஐடி பங்குகளின் தொடர் விற்பனையும் அதனை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 4வது அமர்வாக சரிந்து நிறைவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 490.09 புள்ளிகள் சரிந்து 82,010.38 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 247.01 புள்ளிகள் சரிந்து 82,253.46 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 67.55 புள்ளிகள் சரிந்து 25,082.30 ஆக நிலைபெற்றது.

ஜூலை 9 முதல் இன்று வரையான 4 நாட்களுக்குள் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,460 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 440 புள்ளிகள் சரிந்தன.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ் 1.58 சதவிகிதம் சரிந்த நிலையில் டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன. இருப்பினும் எடர்னல், டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பங்குகள் சரிந்த நிலையில் எடர்னல், டைட்டன் கம்பெனி, இண்டஸ்இண்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், மகாராஷ்டிரத்தில் வரி தகராறு வழக்கில் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததையடுத்து தொடர்ந்து காஸ்ட்ரோல் இந்தியா பங்குகள் உயர்ந்தன. முதலாம் காலாண்டு இழப்பு ரூ.428 கோடியாக குறைந்ததால் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 19 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

பங்குகளை பிரிக்க வாரியம் எடுத்த முடிவால் பி.இ.எம்.எல். பங்குகள் 4 சதவிகிதம் உயர்வுடனும், பிரமோட்டர்ஸ் தங்களிடம் உள்ள 32% பங்குகளை விற்க ஒப்புக்கொண்டதால் வி.ஐ.பி. இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்வுடன் முடிந்தன.

ரூ.9.53 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம் டெஸ்கோ இன்ஃப்ராடெக் பங்குகள் 5 சதவிகிதமும், ரூ.21.60 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம் வின்சோல் இன்ஜினியர்ஸ் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தது.

முதல் காலாண்டில் நிலையான லாபத்தை ஈட்டிய பிறகும் டிமார்ட் பங்குகள் சரிந்தன. இதற்கிடையில் முதல் காலாண்டு லாபம் 6% மற்றும் என்ஐஐ 10% சரிந்ததால் ஆதித்யா பிர்லா மணி பங்குகள் 5 சதவிகிதம் சரிவு. அதே வேளையில் ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள முதல் காலாண்டில் விற்பனை மதிப்பு 65 சதவிகிதம் சரிந்து ரூ.108 கோடியாக இருந்ததையடுத்து அஜ்மீரா ரியாலிட்டி பங்குகள் 1 சதவிகிதம் சரிவுடன் முடிந்தன.

ஆனந்த் ரதி, பிரமல் எண்டர்பிரைசஸ், லாரஸ் லேப்ஸ், விஷால் மெகா மார்ட், குளோபல் ஹெல்த், இஐடி பாரி, ராம்கோ சிமென்ட்ஸ் உள்ளிட்ட 180 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் கிட்டத்தட்ட 52 வார உச்சத்தை எட்டியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஜூலை 18ஆம் தேதி ரூ.5,104.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.71 சதவிகிதம் முதல் 1.04 சதவிகிதம் வரை அதிகரித்தது.

சுகாதாரம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் நிதியாண்டு 2026ல் வருவாய் குறைப்பு அபாயம் காரணமாக ஐடி துறை பங்குகள் பின்தங்கியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று தொடங்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக அமைச்சர் குழு வாஷிங்டனை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில், ஜப்பான் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகளும் இன்று சரிந்து முடிவடைந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் ஜூலை 18ஆம் தேதி சரிவுடன் முடிவடைந்தன.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,974 கோடி டாலராகக் குறைவு

Sensex and Nifty declined on Monday, extending the losing run to the fourth day amid selling in IT shares and foreign fund outflows.

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் முதல் காலாண்டு இழப்பு ரூ.194 கோடி!

புதுதில்லி: உள்நாட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியாளரான தேஜாஸ் நெட்வொர்க்ஸ், ஜூன் 2025ல் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.193.87 கோடி ஒருங்கிணைந்த நஷ்டத்தைபதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 86.02 ஆக நிறைவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடையும் டாலருக்கு மத்தியில் இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவடைந்தது.அந்நிய... மேலும் பார்க்க

அதிக பிக்சல் திறனுடன் புதிய ஸ்மார்ட்போன்! விவோ எக்ஸ் 200 எஃப்இ அறிமுகம்!

விவோ நிறுவனம் எக்ஸ் சீரிஸ் வரிசையில் புதிதாக விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதிக பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. இதன் எடை 186 க... மேலும் பார்க்க

விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா?

விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனக் கிளைகளிலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவைத் தலைமையிடமாகக் கொண... மேலும் பார்க்க

இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ், இந்திய பயனாளா்களுக்கான சந்தா கட்டணங்களை 48 சதவீதம் வரை குறைத்துள்ளது.இது குறித்து அந்த ஊடகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய பயனாளா்கள் மொபைல் செ... மேலும் பார்க்க

டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன. நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குக... மேலும் பார்க்க