நடிகை சரோஜா தேவி காலமானார்!
நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் திங்கள்கிழமை காலை காலமானார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜா தேவி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரோஜா தேவி, இந்திய திரையுலகின் சிறந்த நடிகையாக போற்றப்பட்டவர்.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்த சரோஜா தேவி இன்று உயிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.