``சாப்பாடு போடுறோம்; ஆனா, ஓட்டு போட மாட்டோம்'' -பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நா...
சோளிங்கா் கமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்
சோளிங்கரில் உள்ள ஸ்ரீகமல விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கரில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீகமலவிநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியாா்கள் கோபுர விமான கலசத்துக்கும், மூலவா் சன்னிதி கலசத்துக்கும் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா். தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கவசம், வெள்ளிக் கவசம், பல வண்ண மலா்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் ஆகியவற்றுடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
விழாவில், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் அனிதா, கமல விநாயகா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.