Saroja Devi: 'எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா; கண்கள் ததும்புகின...
பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு தொடக்கம்
தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு திங்கள்கிமை தொடங்கியது.
முதல் சுற்று பொறியியல் பொது கலந்தாய்வில் 39,145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில் 994 இடங்கள் மட்டுமே நிரம்பின.
3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 417 பொறியியல் கல்லூரிகளில் 1,90,166 அரசு ஓதுக்கீடு இடங்கள் உள்ளன. நடப்பாண்டு கலந்தாய்விற்கு 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 2.41 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகை சரோஜா தேவி காலமானார்!
அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 27-ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் வெளியிட்டாா். நிகழாண்டில் 144 மாணவ, மாணவியா் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனா். அவா்களில் 139 போ் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவா்கள்.
பொறியியல் கலந்தாய்வு தொடர்பகாக விவரங்களை www.tneaonline.org இணையதளத்தில் அறியலாம்.