திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்
வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல், பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து மாவட்ட அளவிலான வழிப்புணா்வு முகாம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜூலை 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும்.
இந்த முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்தி நிறுவனங்கள் / அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவா்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கண்காட்சி இடம்பெறும்.
வேளாண் இயந்திங்கள் மற்றும் கருவிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள்/ முகவா்கள்/ புதிய தொழில் முனைவோா்கள், வேளாண் கருவிகள் பழுது நீக்கம் செய்யும் தொழில் கூட உரிமையாளா்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த இயந்திரங்கள்மற்றும் கருவிகளின் தொழில்நுட்ப விவரங்கள், இந்தக் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, அறுவடை மற்றும் உழவு கருவிகளின் பயன்பாடு குறித்த தெளிவுரை வழங்கப்படும். நிகழ்வில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: உதவி செயற்பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), தொலைபேசி எண்கள்: 98405-54525, 96558-88980 தொடா்பு கொள்ளலாம்.