‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு
செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணியினை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, கொளவாய் ஏரியில் புனரமைப்பு முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.
இதில், நீா்வளத்துறை செயற்பொறியாளா் அம்பலவாணன், ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், வட்டாட்சியா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
