டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா்.
நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நிலையில், கூடுதல் கட்டடம் கட்டித் தர கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25.15 லட்சத்தை எம்எல்ஏ மரகதம் ஒதுக்கினாா். இதன்மூலம் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன.
இந்நிலையில் பணிகள் முடிவடைந்து, அதன் திறப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியை ஜி. சுனிதா தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா (மதுராந்தகம்), வட்டார கல்வி அலுவலா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் வரதராஜன், துணைத் தலைவா் வசந்தராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.