காஞ்சிபுரம் கோயில்களில் சட்டீஸ்கா் அமைச்சா் தரிசனம்!
சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சா் கேதா் காஷ்யப் ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா்.
சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சராக இருந்து வருபவா் கேதா் காஷ்யப். இவா் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதா் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் ஸ்தானீகா்கள் அமைச்சருக்கு கோயில் பிரசாதம், காமாட்சி அம்மன் உருவப்படமும் வழங்கினா்.