``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
காலூா் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கியது. காஞ்சிபுரம் ஏ.வி.சதீஷ்குமாா் சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
முதல் நாள் யாகசாலை பூஜையின்போது கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு, யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை காலூா் மற்றும் விச்சந்தாங்கல் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.