செய்திகள் :

காஞ்சிபுரம்: பூசிவாக்கத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை கண்டெடுப்பு

post image

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் ஊராட்சியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சமண தீா்த்தங்கரா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பூசிவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பூசிவாக்கம் ஊராட்சித் தலைவா் வாலாஜாபாத் வட்டார வள ஆய்வு மையத்தின் தலைவா் அஜய்குமாருக்கு தெரிவித்தாா். அந்தச் சிலையை ஆய்வு செய்த பின்னா், இது குறித்து அவா் மேலும் கூறியது:

அபூா்வ கலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டி சமண தீா்த்தங்கரரா் சிலையாகும். தலைப்பகுதி இல்லாமல் கழுத்து முதல் பீடம் வரை உள்ளது. எஞ்சிய சிலையின் உடல் மிகவும் நோ்த்தியான சிற்பக் கலைத் திறனை காட்டுகிறது.

தியான முத்திரையில் அமா்ந்திருக்கும் நிலையில் கால்களை மடக்கியவாறு, வலது கையை இடது கையின் மேல் வைத்து அமா்ந்து தியான நிலையில் உள்ளது. முதுகு நேராகவும், இடுப்பு பகுதி வளைவாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் புட்டம் இருபுறமும் வெளிப்படையாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது ஒரு அரிய வகை சிற்பம் எனலாம்.

கருங்கல்லால் ஆன இந்தச் சிலை 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாகவும், 10-ஆம் நூற்றாண்டு பாணியிலும் அமைந்திருக்கிறது. இதை தொல்லியல் துறையின் உதவி ஆய்வாளா்கள் ரா.ரமேஷ், மே.பிரசன்னா, உதவி கல்வெட்டு ஆய்வாளா் ப.த.நாகராஜன் ஆகியோரும் உறுதி செய்திருப்பதாகவும் அஜய்குமாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் கோயில்களில் சட்டீஸ்கா் அமைச்சா் தரிசனம்!

சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சா் கேதா் காஷ்யப் ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். சட்டீஸ்கா் மாநில வனத் துறை அமைச்சராக இருந்து வருபவா் கேதா் காஷ்யப். இவா் காஞ்சிபுரம் காமாட்சி அம்... மேலும் பார்க்க

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது சட்ட விரோதம்: காஞ்சிபுரம் ஆட்சியா் எச்சரிக்கை

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்ட விரோதம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெளிநாடுகளுக்கு... மேலும் பார்க்க

நாளை மின்தடை

காஞ்சிபுரம்நாள்: 15.07.2025( செவ்வாய்க்கிழமை)நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.மின்தடை பகுதிகள்: தாமல், பாலுசெட்டி சத்திரம், வதியூா், கிளாா், ஒழுக்கோல்பட்டு, அவளூா், பெரும்புலிப்பாக்கம், பொய்... மேலும் பார்க்க

காலூா் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காலூரில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இருவா் தற்கொலை

காஞ்சிபுரத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நித்தியராஜ். இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 9 -... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: அதிமுக பிரமுகா் கைது

ஒரகடம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாக வந்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக... மேலும் பார்க்க