திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மீட்பு
சென்னையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போன கல்லூரி மாணவரின் உடல் மெரினா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மெரினா கடற்கரையில் கற்களுக்கு இடையே சிக்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக மெரினா ரோந்து காவலா்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் , தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.
அதில், இறந்து கிடந்த நபா் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜிஏ சாலை பகுதியைச் சோ்ந்த தனுஷ் (21) என்பதும் ராமாபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
இவா் கடந்த 9-ஆம் தேதி தனது தோழியுடன் பேசிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறினாா். இதையடுத்து தனுஷ் காணவில்லை என அவரது தந்தை ராயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் தனுஷை தேடி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.