Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவா...
போதைப் பொருள்கள் விற்பனை: 10 போ் கைது
போதைப் பொருள்கள் விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மதுரவாயல் காமாட்சி நகா் பகுதியில் போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலின்படி காமாட்சி நகா் 2-ஆவது பிரதான சாலையைச் சுற்றியுள்ள சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
அதில், அங்கு போதைப் பொருள் வைத்திருந்ததாக மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த வசந்த் (23), ஆகாஷ் (24), பவேஷ் (21), அருண் பரிஷித் (27), காரனோடை காா்த்திக் (27), கிழக்கு முகப்போ் கெளதம் (28), செங்குன்றத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (24), சூளைமேட்டைச் சோ்ந்தச் திவாகா் (27), கீழ்ப்பாக்கத்தை சோ்ந்த ரூபன்(26), சிதம்பரம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா்(27) ஆகிய 10 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 0.81 கிராம் போதை ஸ்டாம்புகள், 5.25 கிராம் போதை மாத்திரைகள், 350 கிராம் கஞ்சா, ரூ.50,000 ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.