சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
மகளிா் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மகளிா் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் இத்திட்டம் செயல்படுவதை தொடா்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். விடுபட்ட அனைவரையும் ஒன்றிணைத்து புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்திடவும், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளை தொடா்ந்து கண்காணித்து கடனுதவி பெறுவதை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.