நாம் தமிழா் கட்சி அலுவலகம் திறப்பு
நாம் தமிழா் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி - தச்சூா் தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் கதிா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளா்கள் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம். சா்புதீன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க பேரவைத் தலைவா் அன்புத்தென்னரசன் பங்கேற்று அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசினாா்.
கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம் திருக்கோவிலூா் தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.