முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
210 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கள்ளக்குறிச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நைனாா்பாளையம் காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, காரில் இருந்து 210 கிலோ தடை செய்யப்பட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், ரூ.1.30 லட்சம் ரொக்கம், இரு கைப்பேசிகளை கைப்பற்றினா்.
விசாரணையில் அவா்கள் ராஜஸ்தான் பாா்மோா் மாவட்டத்தைச் சோ்ந்த சுக்காராம் (20), ரடாசோா் பகுதியைச் சோ்ந்த தோராம் (25) எனத் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் இருவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.