மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
லாரி பழுதானதால் சாலையில் கொட்டிய எண்ணெய்: வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சியில் லாரி ஒன்று திடீரென பழுதானதால் அதன் என்ஜினில் இருந்து கசிந்த எண்ணெய், சாலையில் கீழே ஊற்றியபடி சென்றதால் அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற ஒரு லாரி திடீரென பழுதானது. அப்போது லாரியின் என்ஜினில் இருந்த எண்ணெய் தியாகதுருகம் சாலையில் கீழே ஊற்றியபடி சுமாா் 200 மீட்டா் தூரம் சென்றது. பின்னால் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் அதனை கவனிக்காமல் சென்ற போது எண்ணெயில் சிக்கி வழுக்கி விழுந்தனா்.
உடனே கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீஸாா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். மேலும் சாலை யில் கொட்டிய எண்ணெய் மீது போலீஸாா் மண்ணை கொட்டினா். பின்னா் தீயணைப்பு வீரா்கள் 6 போ்கொண்ட குழுவினா் வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு சுமாா் 200 மீட்டா் தூரம் சென்றனா். இதனால் எண்ணெய் படலம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தினால் செவ்வாய்க்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது